WHO IS READING THIS BLOG JESUS BLESS YOU

Sunday, March 13, 2016

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்


கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2)
உமக்கொப்பானவர் யார் – 2
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் – 2
1. செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர் (2)
நீர் நல்லவர் சர்வவல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் (2) உமக்கொப்பானவர்…
2. தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே (2)
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட (2) உமக்கொப்பானவர்…
3. கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
உம் நாமம் அதிசயம்
என்றும் அற்புதம் செய்திடுவீர் உமக்கொப்பானவர்…

0 comments:

Post a Comment

.

Blog Archive