மண்ணிலிருந்து, மனிதன் பெற்றுக்கொண்ட உடல், என்ன தன்மை கொண்டது?
உடல், பாவத்தன்மை கொண்டது - உரோ 7:25; சா.ஞா 1:4.
விண்ணிலிருந்து, மனிதன் பெற்றுக்கொண்ட ஆன்மா, என்ன தன்மை கொண்டது?
ஆன்மா, பரிசுத்த தன்மை கொண்டது - சா.ஞா 3:1.
பாவ உடலோடு, பரிசுத்தமான ஆன்மா சேருவதால், உண்டாகும் விளைவு என்ன?
ஆன்மா மாசுபடும் - உரோ 7:19-20; சா.ஞா 1:12.
ஆன்மா, மாசுபடாமலிருக்க, ஒருவர் என்ன செய்ய வேண்டும்?
உடலோடு உள்ள, நெருக்கத்தை (உறவை) குறைத்துக்கொள்ள வேண்டும் - 1கொரி 7:5.
வாழ்க்கையில், ஆன்மாவுக்கு முதலிடமும், உடலுக்கு இரண்டாவது இடமும், கொடுக்க வேண்டும் - மத் 6:33.
உடலின் இயல்புகளுக்கு, அடிமையாகாதபடி, மனதையும், உடலையும், கட்டுப்படுத்த வேண்டும் - 1கொரி 9:27.
தன்னடக்கத்தைக் கைக்கொண்டு, மனதின் ஆசைகளை அடக்க வேண்டும் - 1கொரி 9:25.
உடலின் எட்டு தேவைகளில், ஒன்று இல்லாமல் கூட, என்னால் வாழ முடியாது என்ற, மனநிலையே, உடலின் இச்சை - சீரா 29:21; 39:26; உரோ 8:5.
1. பசிக்கு உணவு - சீரா 31:16
2. களைப்பில் உறக்கம் - சீரா 31:20.
3. நோய்க்கு மருந்து - சீரா 38:1.
4. பருவத்தில் இணை - 1கொரி 7 :9.
5. இணையில் சந்ததி - 2அர 4 :14-17
6. தங்க வீடு - சீரா 29:21.
7. ஆபத்தில் பாதுகாப்பு - யோசு 20:9.
8. நாளைக்கு சேமிப்பு - சீரா 29:12; தொ.நூ 41:48.
உடல் இறந்ததும், ஆத்துமா உடனடியாக விண்ணுக்கு செல்ல முடியாத நிலை உருவாகும் - மத் 25:46; 5:20.
ஆன்மா, உத்தரிக்கும் ஸ்தலத்துக்குப் போய், பாவப்பரிகாரம் செய்து முடித்து, பரிசுத்தமடைந்து, மீண்டும் விண்ணுக்குச் செல்லும் - மத் 5 :25-26.
1. உலக வாழ்வு - ச.உ 2 :3.
2. மறுஉலக வாழ்வு - உரோ 8:5, 1கொரி 2:15, என இரண்டு வகைப்படும்.
2. உத்தரிக்கும் ஸ்தல வாழ்வு – 1பேது 3 :19-20, என இரண்டு வகைப்படும்.
பாவ மாசுபடாத ஆத்துமா, உடலின் இறப்புக்குப் பின்பு, தாம் வந்த இடமாகிய விண்ணுலகுக்குச் சென்று, அங்கே நித்தியமாய் வாழும் வாழ்வு – 1தெச 5:23 , தானி 12:2-3.
இந்த உலகத்தில், தங்கள் பாவங்களுக்கு பரிகாரம் செய்யாதவர்கள், இறந்த பின்பு, மறு உலகில் சென்று, பாவப்பரிகாரம் செய்து, மீட்பை அடையும் இடம், உத்தரிக்கும் ஸ்தலம் - 2மக் 12:45, 1கொரி 3 :15.
பைபிளில், நாம் காணும் நரகம் தான், உத்தரிக்கும் ஸ்தலம் - 1பேது 3 :19, 4:6.
நரகம் என்றால் ஒரு இடமல்ல. அது ஒரு அனுபவம்.
துன்பத்துக்கு அல்லது வேதனைக்கு செல்வது என்று பொருள். அங்கே அழுகையும், அங்கலாய்ப்பும் இருக்கும் - மத் 25:30.
உண்டு. அது உத்தரிக்கும் ஸ்தலத்தில் நடைபெறுகிறது - சக் 13:9. “உன்னைப் புடமிட்டு சுத்திகரிப்பேன்” - தானி 12:2-10.
உத்தரிக்கும் ஸ்தலத்தில் நடைபெறுகிறது - மலா 3 :2-6.
பைபிள் கூறும், நரகத்தில் நான்கு காரியங்கள் உள்ளன.
இந்த நான்கிற்கும் அர்த்தம் :
இந்த நான்கும், ஒருவருக்குக் கிடைத்தால், அவர் மீட்பை அடைகிறார். எனவே, “மீட்பைக் கொடுக்கும் நரகத்தை”, நாம் “உத்தரிக்கும் ஸ்தலம்” என்று சொல்கிறோம் - 1கொரி 3:15.
இறந்த அனைவரும், அங்கே செல்வர். “என் மகன் இருக்கும் பாதாளத்துக்கு நானும் செல்வேன்”- தொநூ 37 :35. “பாதாளம் அனைவரையும் வரவேற்கிறது - எசா 14 :9.
இதன் வரலாற்றுப் பின்னணி பின்வருமாறு:
மேற்குறிப்பிட்ட கருத்துக்களின் அடிப்படையில், செய்யக்கருதிய தீங்கைக் குறித்து, மனம் மாறுகின்ற கடவுள் - யோனா 3 :10, தம் பிள்ளைகளை, பாவத்திலேயே அழிந்து போக விடமாட்டார். இதிலிருந்து, “உத்தரிக்கும் ஸ்தலம்” அல்லது, “பாவப்பரிகாரம் செய்யும் இடம்” என்ற ஒரு வாய்ப்பையும், கடவுள் மனிதனுக்கு வைத்துள்ளார் என்பது, நமக்கு மிகவும் தெளிவாக விளங்கும்.