WHO IS READING THIS BLOG JESUS BLESS YOU

Tuesday, December 29, 2015

Saturday, December 26, 2015

இந்தியாவில் இன்றும் வழக்கத்தில் உள்ள தேவதாசி முறை?

விபச்சாரம் ஒரு குலம் சார்ந்ததில்லை, தேவதாசி முறை ஒரு குலம் சார்ந்தது.
இந்தியா உட்பட எல்லா நாடுகளும் விபச்சாரத்தை ஒழிக்கப் பாடுபடுகிறது. ஆனால், வெற்றி காணவில்லை.
வளர்ந்த நாடுகளும் இயலாமைக்கு வெட்கப்படுகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு என இதை தடுக்க எத்தனை சீர்திருத்தங்கள் கொண்டுவந்தாலும், சில இடங்களில் விபச்சாரம் இன்னும் நடக்கிறது.
வறுமை, கல்வியின்மை, குடும்ப சூழலால் பெண்கள் விபச்சாரத்தில் சிக்குகிறார்கள்.
ஆனால், பதவி அதிகாரமும் வியாபார குறிக்கோளும் கொண்டவர்கள்தான், தடைமீறி இயக்குகிறார்கள்.
பழங்காலத்தில் மதம், ஜாதி ஏற்றத்தாழ்வு, ஏமாற்று நம்பிக்கைகள், கலைகள், கதைகள் என எல்லாமே கடவுளின் பெயரில்தான்.
இதை வஞ்சகர்கள் பின்னணியில் வெகுளிகளும் சேர்ந்தே உருவாக்கினார்கள். அதில் ஒன்றுதான் இந்த தேவதாசிகள் வழக்கம்.
கர்நாடகாவில் இன்னும் தேவதாசிகள்:
கர்நாடகாவில் தேவதாசி முறை இன்னும் வழக்கத்தில் உள்ளது. இந்தியாவில் இதுபோல இன்னும் மூன்று இடங்களில் உள்ளது.
திருமணமான செல்வந்தர்களுக்கு இன்னொரு மனைவி போல இருந்து சல்லாபம் செய்கிறார்கள். குழந்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். அந்த குழந்தைக்கும் கல்வி, நாட்டியம், பாட்டு, எல்லாம் கற்பிக்கிறார்கள்.
ஆனாலும் எதிர்காலத்தில் ’பொட்டுகட்டுதல்’ வழக்கத்தால் இன்னொருத்தி கணவனிடம் கள்ள வாழ்க்கை நடத்தவே தயார்படுத்துகிறார்கள். இது தலை விதியா? சமூக சதியா?
அந்த கணவனையும் கூட பலமுறை மாற்றிக்கொள்கின்றனர். தேவதாசிகள் சமுதாயத்தில் மதிக்கப்படுவது அவர்கள் கைப்பிடிக்கும் பணக்காரர்களை கருதியே. சுயமில்லாத அதுவும் இழிவே.
தமிழகத்தில் தேவதாசிகள்:
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில், தேவதாசி குலத்தில் பிறந்த மாதவிக்கு ’பொட்டுகட்டுதல்’ நிகழ்ச்சி நடக்கும்போது, கண்ணகியின் கணவனான கோவலன், வணிக செல்வந்தனாக வாழ்வதால் பெரும்பொருள் கொடுத்து, மாதவியை தனது உரிமையாக்கிக்கொள்கிறான். அதுவே காப்பிய கதையின் திருப்பமாக செல்கிறது.
சிலப்பதிகாரம் தமிழகத்தில் தேவதாசி வழக்கம் இருந்ததற்கான சாட்சி நூல். மேலும், கோவில்களிலும் தேவ அடியார்களாக பெண்கள் பணிசெய்துள்ளனர்.
செல்வந்தர்கள் வீடுகளிலும் பெண்கள் அடிமை பணிசெய்துள்ளனர். மகளை திருமணம் செய்து கொடுக்கும்போது, இந்த அடிமை பெண்களையும் ஒரு பொருள் போல தானமாக மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
தமிழக சட்டமன்றத்தில் தேவதாசி முறையை ஒழிக்க சட்டம் கொண்டுவர கோரிக்கைகள் எழுந்தபோது, பழமைவாதியான ஒரு தேசிய தலைவர் ’தேவதாசிகள் இருப்பதில் தவறில்லை, மிருகமாக வரும் ஆண்களை மனிதர்களாக மாற்றும் பணியையே அவர்கள் செய்கிறார்கள்’ என பரிந்துரைத்து பேசினார்.
அதற்கு பதிலளித்த டாக்டர் முத்துலெட்சுமி ‘அப்படி மிருகமான ஆண்களை மனிதர்களாக்க அக்கறை இருந்தால் உங்க வீட்டு பெண்களை அனுப்புங்கள்’ என்று தேவதாசி குலத்தவர்களின் வேதனையை முன்வைத்தார். முடிவாக தமிழகத்தில் சட்டப்படி தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.
கோவில்களை அதிகாரத்தில் வைத்திருந்தவர்களும், அவ்வூரில் வாழ்ந்த செல்வந்தர்களும் கடவுளை பயன்படுத்தி, செய்துவந்த தொடர் விபச்சாரத்திற்கான தொலைநோக்கு திட்டமே இந்த தேவதாசி முறை என்பதை வளர்ச்சியடைந்த சமுதாயம் இப்போது தெளிந்துள்ளது.
வேலிதாண்டி மேய்ந்தால் தவறுதான். ஆனாலும், மாடுகளுக்கு பிடித்தமான வெள்ளாமை வேலிக்குள் இருக்கும் காரணம் போல, காம இச்சைகளை குற்றசெயல்கள் என ஒதுக்கினாலும் அது மனிதனுக்கு பிடித்தமான செயலாகவும் இருப்பதால், அந்த கட்டுப்பாடுகளோடு மனிதன் போராடுவது யதார்த்தமே.
செல்வாக்குள்ள மனிதர்கள் கட்டுப்பாடுகளை கடக்கும் ஒரு கலமாக தேவதாசி முறையை கையாண்டனர்.
இந்தியாவில் தேவதாசி பெயரில் நடந்தாலும் உலகம் முழுதும் வேறுபெயர்களிலும் வழக்கங்களிலும் இந்த விபச்சாரம் நடந்துள்ளதும் தெரிகிறது.
ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா கண்டங்களின் அனைத்து நாடுகளிலும் விபச்சார வழக்கங்களுக்கு நீந்திச்செல்ல முடியாத நெடும் வரலாறுகளே இருக்கின்றன.
நேபாளத்தில் கூட தேவதாசி வழக்கம் பத்து ஆண்டுகளுக்கு முன்புதான் ஒழிக்கப்பட்டது.
கடவுள் அமுதையும் விஷத்தையும் ஒரே பாத்திரத்தில் வைத்ததன் குழப்பமே. மனிதர்களால் இன்னும் இதை, தடுத்துக்கொள்ள முடியாத தடுமாற்றம்.
உலகில் நடந்த முதல் வியாபாரமே விபச்சாரம்தான். ஆனால், அந்த வியாபாரத்தை நாம் குடும்பம் என்ற வழக்கத்துக்குள் கொண்டு வந்துவிட்டோம்.
அதனால், விபரீதமான விபச்சாரத்தை ஒழிப்பது, நம் குடும்ப பெண்களுக்கும் சேர்க்கும் பெருமைதான்.


- மருசரவணன்
நன்றி http://india.lankasri.com/view.php?23DK2c6M442M4303lA3deO322o02e3Ag2bUmN3

Thursday, December 24, 2015

என்னை பரிசுத்த படுத்த பாலகன் ஆனவரே

பாவ இருள் நீங்க மானிடரான  பரம ஒளியே
மானிடரின் பயம் நீக்க வந்த ஜீவ ஒளியே
உம் மகத்துவங்களை கற்று தர அவதரித்த என்நேசரே
எம் ஆத்துமாவை அமைதிபடுத்த வந்த  அருள் ஒளியே
ஒருவரும் ஒருபோதும் காண கூடாத ஒளியே
எம் கண்கள் காண அவதரித்தீரே
வான தூதர்கள் பரிசுத்தவான்களினால் புகழபடுபவரே
என்னை காண பாவ உலகத்தில் ஏழ்மையில் அவதரித்தீரே
என்னை பரிசுத்த படுத்த பாலகன் ஆனவரே
என்னுயிரை காக்க உன்னுயிரை கொடுக்க  மானிடன் ஆனீரே
என்னை பரலோகம் கொண்டு செல்ல பாலகனாக  வந்தவரே
நம் முன்னோர் மன்னவை கொடுத்தவரே
நமக்கோ ஜீவ மன்னாவாக பாலகனாக அவதரித்தீரே
அன்பிற்கு வரைவிலக்கணம் கொடுக்க வந்தவரே
எனக்காக யாவற்றையும் செய்து முடிக்க பாலகனாக  வந்தவரே

எனது இணையதள வாசகர் அனைவருக்கும்  எனது நத்தார் வாழ்த்துக்கள்  
கத்தர் இயேசு நிறைவாக உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

Wednesday, December 23, 2015

முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அதன் நீதியையும் தேடுங்கள்

முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அதன் நீதியையும் தேடுங்கள்" என்பதன் உண்மையான அர்த்தம் என்ன?

Tuesday, December 22, 2015

இருந்தவரும் இருப்பவரும் என் இயேசுவே song

இருந்தவரும் இருப்பவரும் என் இயேசுவே
வருபவரும் வர இருபவரும் என் இயேசுவே
நடந்திடுவோம் அவர் பாதையில்
கேட்டிடுவோம் அவரின் குரலை
வருபவரும் வர இருபவரும் என் இயேசுவே
மனுமகன் வருவார் காலம் இல்லை நேரம் இல்லை எந்நேரமும் வந்திடுவார்
கால தாமதம் இன்றி வந்திடுவார் விளித்தேழுவோம் விளித்தேழுவோம் விளித்தேழுவோம்
வருபவரும் வர இருபவரும் என் இயேசுவே
பாவங்கள் கோபங்கள் பெருமைகள் அகற்றிடுவோம்
மன்னிப்பு கேட்டு மகிழ்ச்சியாக வாழ்த்திடுவோம்
பாவங்கள் கோபங்கள் பெருமைகள் அகற்றிடுவோம்
மன்னிப்பு கேட்டு மகிழ்ச்சியாக வாழ்த்திடுவோம்
மன்னிப்பு கேட்டு மகிழ்ச்சியாக வாழ்த்திடுவோம்
மனுமகன் வரும் வரை காத்திடுவோம்
புகழ்திடுவோம் மகிழ்திடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
மனுமகன் வாருவார் கொண்டாடுவோம்
வருபவரும் வர இருபவரும் என் இயேசுவே
இருந்தவரும் இருப்பவரும் என் இயேசுவே

Friday, December 18, 2015

சபையே பொறுப்பை உணர்ந்து ஆயுத்தபடு

தமிழா  உன்னை  யூதருக்கு  நிகராக  பரலோக  தேவன்  நேசிக்கிறார்  உன்னை வைத்து  உலகை அசைக்க போகிறார் சபையே பொறுப்பை உணர்ந்து ஆயுத்தபடு  நம்  தேவனுக்காக  உலகை ஆயித்தபடுத்து தேவன் சிக்கிரம் வந்துடுவார் 

Thursday, December 17, 2015

The Wonderful Counsellor Bro. DGS Dhinakaran Jesus Calls Jesus Calls

Title: The Wonderful Counselor (English - Tamil)
Message By: Bro. DGS Dhinakaran
Description: For to us a child is born, to us a son is given, and the government will be on his shoulders. And he will be called Wonderful Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace. (Isaiah 9:6)

Thursday, December 10, 2015

இராஜ தந்திரம் என்ற பெயரால் ஜால்ரா போடுவது எப்படி?

இலங்கை தமிழர் பிரச்சனையை அறியாத தமிழர்  இருக்க  முடியாது 2009 இனபடுகொலையில் முடிந்த தமிழர்  போராட்டம் தம்மை  ஜனநாயகவாதிகளாக காட்டி கொள்பவர்கள் தேர்தல் வந்தால் மிகுந்த தமிழ்பற்றாளர் போல உணர்ச்சியை துண்டும் வீர் வசனம் பேசி  தேர்தலில் வெற்றி பெற்று விட்டதும் சிங்கள அரசின்  மற்றும் உலக வல்லாதிக்க சக்திகளின் சலுகைகளை பெற்று கொண்டு நடந்த கொடுமைகளை உண்மையுடன் கூறினால் அவர்கள் மனம் பாதிக்கும் எனவே தங்கள் எஜமானருக்கு 
இராஜ தந்திரம் என்ற பெயரால் ஜால்ரா போடுவதுடன் உலக நாடுளுக்கு பயணம் செய்து இலங்கை அரசுக்காக பரிந்து பேசி வருகின்றமை மிகுந்த வேதனையான உண்மை. இவர்களை யாரரவது கோள்வி கேட்டால் ஐநா இலங்கை சார்பாக தீர்மானம் போட்டதால் அத்துடன் உலக நாடுகள் எல்லாம் இலங்கை சார்பாகவும் தமிழருக்கு எதிராகவும் உள்ளது உலகத்தை எதிர்பவர் யாரு எனவே இணங்கி போவதை தவிர  வேறு வழி இல்லை  என்பார்கள் இந்த பதிவின் நோக்கம் அரசியல் அல்ல வேதம் சொல்லும் படி வர போகும் சர்வதிகாரியான அண்டிகிறிஸ்ட் (AntiChrist)அவன் இது வரை  உலகம்  கண்டிராத பயங்கரமான  சர்வதிகார  ஆட்சி நடத்துவான்  அப்போது மக்கள் எல்லாரும் உலக அதிகாரம் இவன் கையில் இருகின்றது எனவே இவனை  எதிர்பவர் யார் என அவனை எல்லாரும் வணகுவார்கள்.
வெளிப்படுத்துதல் 13 அதிகாரம்3, 4 
3. அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி,


4. அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.

எனவே இலங்கை ஜனநாயகவாதிகளின் பேச்சில் இருந்து எப்படி அந்நாட்களில்  வேத வசனம் நிறைவேறும் என்று நம்மால் உணர கூடியதாக உள்ளது 

வாழ்க்கை பயணம்தில் நாம் கற்று கொள்ளவேண்டியது என்ன ?

வாழ்க்கை என்பது ஒரு பயணம். அதில் நம்மை ஆயத்தபடுத்த வேண்டிய காரியங்கள்  என்ன ? 

Monday, December 7, 2015

நாய்களுக்கு கொடுக்கும் உணவை உண்டு அனாதையாக வளர்ந்தவர்

நாய்களுக்கு கொடுக்கும் உணவை  உண்டு  அனாதையாக வளர்ந்தவர் ஒரு விபசாரியின் மகன் துன்பமே வாழ்க்கையாக வாழ்ந்தவர் இன்று  எப்படி தேவனால் மீட்கபட்டவர்? எப்படி வல்லமையால் பயன்படுத்தபடுகிறார் ?

சென்னைஇன் பாதுகாபிற்காகவும் தேவனுடைய கோபம் தணியவும் செபித்து கொள்ளுங்கள்

சென்னைஇன் பாதுகாபிற்காகவும் தேவனுடைய கோபம் தணியவும் செபித்து கொள்ளுங்கள்.சென்னையில் வெள்ளம் வருவதற்கு என்ன காரணம்  ?

Thursday, December 3, 2015

மத்திய கிழக்கு நாடுகளை குறித்து தேவனின் திட்டம் என்ன 04?


மத்திய கிழக்கு நாடுகளை குறித்து தேவனின் திட்டம் என்ன ? நாங்கள் என்ன செய்ய வேண்டும் ...

மத்திய கிழக்கு நாடுகளை குறித்து தேவனின் திட்டம் என்ன 03 ?

மத்திய கிழக்கு  நாடுகளை  குறித்து  தேவனின் திட்டம் என்ன ? நாங்கள் என்ன செய்ய  வேண்டும் 

மத்திய கிழக்கு நாடுகளை குறித்து தேவனின் திட்டம் என்ன 02 ?

மத்திய கிழக்கு  நாடுகளை  குறித்து  தேவனின் திட்டம் என்ன ? நாங்கள் என்ன செய்ய  வேண்டும் 

மத்திய கிழக்கு நாடுகளை குறித்து தேவனின் திட்டம் என்ன ?

மத்திய கிழக்கு  நாடுகளை  குறித்து  தேவனின் திட்டம் என்ன ? நாங்கள் என்ன செய்ய  வேண்டும் 

தீர்கதரிசனங்கள் சும்மாவா உரைக்கபடுகிறது

தீர்கதரிசனங்கள்  சும்மாவா உரைக்கபடுகிறது தீர்கதரிசனங்களின்  வகைகள் எவை ? உரைபவரின் அனுபவம் என்ன ?

.

Blog Archive