WHO IS READING THIS BLOG JESUS BLESS YOU

Friday, July 17, 2015

நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு

நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு 
வீண் பெருமை புகழ் ஆஸ்தி குப்பை என்று தள்ளிடு
நீ துடைத்துப்போடும் அழுக்கைப் போல காணப்பட்டாலும்
பின்வாழ்வுக்காக உலகை வெறுத்து ஒதுக்கி தள்ளிடு

பலவான்களை வெட்கப்படுத்தவே 
பெலவீனரை தேவன் தெரிந்துகொண்டாரே (2)
ஞானவான்களைப் பைத்தியமாக்கவே
பைத்தியங்களை தேவன் தெரிந்துகொண்டாரே

நகையிலே பைத்தியம் புகையிலை பைத்தியம்
உடையிலே பைத்தியம் எதற்கு நீ பைத்தியம் 
மண்ணாசை பைத்தியம் பெண்ணாசை பைத்தியம்
மயக்க மருந்து நீ எதற்கு பைத்தியம் 
சாராய பைத்தியம் பீர் ஜின்னு பைத்தியம்
ரம் விஸ்கி பைத்தியம் காப்பி டீ பைத்தியம்
பதவி ஆசை பைத்தியம் ஆளுக்காக பைத்தியம்
நீ எதற்கு பைத்தியம்

தேவன் உன்னிலே உலக செல்வம் அழியுமே 
உயர்ந்த ஆடைகள் போட்டரித்து போகுமே 
உலக ஞானமே தேவன் பார்வையில் 
உதவும் பைத்தியம் என்று ஆகுமே 

சினிமாவிலே பைத்தியம் சூதாட்ட பைத்தியம்
பணத்திலே பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்
கட்சியிலே பைத்தியம் வீண்பேச்சு பைத்தியம் 
குதிரை பந்தய பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்
ஆனந்தவிகடன் பைத்தியம் ராணி முத்து பைத்தியம்
பேசும் படம் பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்
சாவி குங்குமம் பைத்தியம் குமுதம் கல்கி பைத்தியம்
சினிமா எக்ஸ்பிரஸ் பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்

கடவுள் பைத்தியம் என்று சொல்வது 
உலக ஞானத்திலும் மிகவும் அதிகமே 
சிலுவை உபதேசம் பைத்தியம் எனப்படும்
மீட்கப்பட்டவர்க்கு அது தேவ பெலனாகும்

வெத்தலை பாக்கு பைத்தியம் பூ வைக்கும் பைத்தியம்
தூக்கத்திலே பைத்தியம்
உணவிலே பைத்தியம் ஊர்சுத்தும் பைத்தியம்
சிற்றின்ப பைத்தியம்
லிப்ஸ்டிக் பைத்தியம் க்யூடெக்ஸ் பைத்தியம்
ஐடெக்ஸ் பைத்தியம்
இட்டுகட்டு கிரிக்கெட்டு பைத்தியம் மேநாட்டு பைத்தியம் 

தாழ்வும் உயர்வுமே இயேசுவுக்காக 
வாழ்ந்து நானுமே இரத்த சாட்சியாகவே 
ஏழ்மை வந்திடினும் எதிர்ப்பு நேரிடினும் 
என் சாவும் இயேசுவுக்கே

0 comments:

Post a Comment

.

Blog Archive